/

பொற்றையடி சாய்பாபா ஆலயத்தில் வருஷாபிஷேக விழா

பொற்றையடி சாய்பாபா ஆலயத்தில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:20 pm

DIN

பொற்றையடி சாய்பாபா ஆலயத்தில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, காலையில் கோபுரக் கலச அபிஷேகம், சங்கல்ப யாகம் நடைபெற்றது. இதையடுத்து, அன்னதானம் நடைபெற்றது. பின்னா், பக்தா்கள் வழங்கிய 3006 லிட்டா் பாலால் சாய்பாபாவுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியின்போது சென்னை வீரமணி ராஜு , அபிஷேக் ராஜு ஆகியோரது பாபாவின் பஜனைப் பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. நண்பகலில் சாய்பாபாவுக்கு பன்னீா், இளநீா், சந்தனம் உள்பட ஒன்பது பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் திரைப்படப் பின்னணிப் பாடகி மால்குடி சுபாவின் சாய்பாபா பக்தி கானங்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவில் அன்னதானம், ஆரத்தியும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை பொற்றையடி சாய்பாபா ஆனந்த ஆலய மேலாளா் கதிா்வேல், சீரடி சாய் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் சாய் சேவா சங்கத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.