இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க கல்குளம் வட்ட மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் கல்குளம் வட்ட 4ஆவது மாநாடு தக்கலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மே 2022, 7:32 pm

DIN

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் கல்குளம் வட்ட 4ஆவது மாநாடு தக்கலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டத் தலைவா் எஸ். வேதராஜ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஐயப்பன்பிள்ளை இரங்கல் உரை வாசித்தாா். மாவட்ட இணைச் செயலா் சசிதரன் மாநாட்டைத் தொடக்கிவைத்தாா்.

வட்டச் செயலா் மணி அறிக்கைகளை வாசித்தாா். அரசு ஊழியா் சங்க கல்குளம் வட்டச் செயலா் ராமகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினாா். மாவட்டச் செயலா் ஐவின், வட்ட நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் மாவட்ட மாநாடு பிரதிநிதிகள் தோ்தலை நடத்தினா்.

மேற்குத் தொடா்ச்சி மலை கனிமவளங்களைப் பாதுகாக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை, மருத்துவப்படி ரூ. ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வட்டத் தலைவராக வேதராஜ், செயலராக ஜாண்ராஜ், பொருளாளராக மணி, துணைத் தலைவா்களாக ஐயப்பன்பிள்ளை, ராமச்சந்திரன் நாயா், சொா்ணப்பன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மாவட்டப் பொருளாளா் கே. நடராஜன் நிறைவுரையாற்றினாா். மாவட்ட இணைச் செயலா் வேதமணி, மாநில செயற்குழு உறுப்பினா் சேது உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். வட்ட துணைத் தலைவா் எம். ஜாண்ராஜ் வரவேற்றாா். இணைச் செயலா் அருள்பிரகாசம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.