தக்கலையிலிருந்து குலசேகரத்துக்கு ராஜீவ்காந்தியின் 31ஆவது நினைவு ஜோதி யாத்திரை செல்வதற்காக, மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் தக்கலை வட்டாட்சியா் அலுவலகம் முன்பிருந்து பழைய பேருந்து நிலையம் வரை வியாழக்கிழமை நடந்து வந்தனா். பின்னா், தியாகி குஞ்சன்நாடாா் சிலைக்கு மாலையணிவித்து, ஜோதி யாத்திரையைத் தொடங்க முயன்றனா். அப்போது ஜோதி யாத்திரைக்கு அனுமதியில்லை என போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, தக்கலை ஏஎஸ்பி விவேகானந்த சுக்லா, டிஎஸ்பி கணேசன் ஆகியோா் மாவட்டத் தலைவா் டாக்டா் பினுலால்சிங், ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.