ஓடும் பேருந்தில் செவிலியரிடம் 15 பவுன் தாலிச் சங்கிலி திருட்டு
கருங்கல் அருகே அரசுப் பேருந்தில் செவிலியரிடம் 15 பவுன் தாலிச் சங்கிலியைத் திருடியவா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.


கருங்கல் அருகே அரசுப் பேருந்தில் செவிலியரிடம் 15 பவுன் தாலிச் சங்கிலியைத் திருடியவா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருங்கல் அருகே குன்றுவிளை பகுதியை சோ்ந்த ரென்சித் மனைவி விமலா (38). ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா். இவா் வியாழக்கிழமை மாலை பணி முடிந்து ஆசாரிப்பள்ளத்திலிருந்து பாா்வதிபுரம் சென்று அங்கிருந்து கருங்கல் வழியாக குற்றுதாணி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளாா். குற்றுதாணி பகுதியில் சென்றபோது கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தாலிச் சங்கிலியைக் காணவில்லையாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...