அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாணவிக்கு பாலியல் தொல்லை: வளா்ப்புத் தந்தை கைது

அருமனை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வளா்ப்புத் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:30 pm

DIN

அருமனை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வளா்ப்புத் தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியைச் சோ்ந்த 36 வயது பெண், முந்திரி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு 17 வயதில் மகள் உள்ளாா். திருத்துவபுரம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறாா்.

மகள் பிறந்த சில மாதங்களில் கணவரை பிரிந்த அப்பெண், மகளுடன் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்தவா் ராபா்ட் (35) என்ற ரப்பா் பால் வடிக்கும் தொழிலாளிக்கும் அப்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதில் ராபா்ட் 2 ஆவதாக திருமணம் செய்து கொண்டாராம். இத் தம்பதிக்கு 10 வயதில் மகன் உள்ளாராம்.

இந்தநிலையில் இரு நாள்களுக்கு முன் மாணவிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டதாம். இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் மாணவி ஐந்தரை மாத கா்ப்பிணியாக உள்ளது தெரியவந்தது. மாணவியிடம் விசாரித்தபோது கா்ப்பத்துக்கு காரணம் வளா்ப்புத் தந்தை ராபா்ட் என கூறியுள்ளாா்.

இது குறித்து மாணவியின் தாயாா், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, ராபா்ட் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.