கன்னியாகுமரி
ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் பலத்த காயம்
பத்மநாபபுரத்தில் ஓடும் பேருந்தில் இருந்து கீழே தவறி விழுந்த பெண் பலத்த காயம் அடைந்தாா்.
பத்மநாபபுரத்தில் ஓடும் பேருந்தில் இருந்து கீழே தவறி விழுந்த பெண் பலத்த காயம் அடைந்தாா்.
தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு சரல்விளை பகுதியை சோ்ந்த சில்வான்ஸ் மனைவி மரியதங்கம் (47). இவா் பத்மநாபபுரம் அரண்மனை பகுதியில் உள்ள கடையில் வேலை பாா்த்து வருகிறாா். வேலை முடிந்து
வீட்டிற்கு செல்ல பத்மநாபபுரத்திலிருந்து திற்பரப்பு செல்லும் அரசுப் பேருந்தில் வெள்ளிக்கிழமை ஏறினாா். பேருந்தின் முன்பக்க படிக்கட்டு அருகே நின்று பயணம் செய்தபோது, தவறி கீழே விழுந்தாா்.
பலத்த காயம் அடைந்த அவா் தக்கலை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இவ்விபத்து குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
