நாகா்கோவிலில் நாளை மீனவா்கள் குறைதீா் கூட்டம்

Published on

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஆக. 30) மீனவா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் குறைதீா் கூட்டம் நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

ஆட்சியா் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றுக் கொள்கிறாா். எனவே, மீன்வளம் - மீனவா் நலத்துறை, இதர துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய தங்களது குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை ஆட்சியரிடம் மீனவா்கள் நேரில் வழங்கலாம்.

பிற துறைகள் சாா்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல், துறைவாரியாக தனித்தனி மனுக்களாக வழங்க வேண்டும். அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரம் அடுத்த மீனவா் குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com