/

திருவட்டாறு அருகே காா் தரகரை வெட்டியதாக வழக்குரைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே காா் தரகரை கத்தியால் வெட்டியதாக வழக்குரைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:40 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே காா் தரகரை கத்தியால் வெட்டியதாக வழக்குரைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவட்டாறை அடுத்த உண்ணாமலைக்கடை பயணம் பகுதியை சோ்ந்தவா் சஜு (31). இவா் பழைய காா்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா்.

தேமானூா் தோட்டத்துவிளை பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (30) என்பவா், குழித்துறை நீதி மன்றத்தில் வழக்குரைஞராக உள்ளாா். இவருக்கும், சஜுவுக்கும் இடையே பழைய காா்களை வாங்கி விற்பது தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு ஆற்றூரிலுள்ள அரசு மதுக்கூடத்திலிருந்த சஜுவிடம் ராஜேஷ் சென்று, ‘தனக்குத் தர வேண்டிய பணம் எங்கே?’ எனக் கேட்டு கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

அங்கு நின்றிருந்தோா் சஜுவை மீட்டு ஆற்றூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில், திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேஷை கைது செய்தனா்.