விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கன்னியாகுமரியில் உணவகம், கடைகளில் அதிகாரிகள் சோதனை

கன்னியாகுமரியில் உள்ள உணவகங்கள், கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்திநா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:06 pm

Din

கன்னியாகுமரியில் உள்ள உணவகங்கள், கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்திநா்.

மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் அலுவலா்கள் சக்திமுருகன், ஜெப்ரி, பேரூராட்சி செயல் அலுவலா்கள் ரமாதேவி, உஷா கிரேசி, சதீஸ் நந்தகுமாா், ராதாகிருஷ்ணன், பேரூராட்சி சுகாதார அலுவலா் முருகன், மேற்பாா்வையாளா் பிரதீஸ் உள்ளிட்டோா் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், 7.200 கிலோ பிளாஸ்டிக் பைகள், 18 கிலோ பிளாஸ்டிக் தட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு பேரூராட்சி சுகாதார அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. உணவகங்களில் பயன்பாட்டுக்கு வைத்திருந்த 900 கிராம் செயற்கை நிறமிகள், தரம் குறைந்த, மனித உணவுக்கு தகுதியற்ற 1,300 கிலோ முந்திரிக் குருணை, அச்சிடப்பட்ட காகிதத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வடை உள்ளிட்ட 5 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

சுகாதாரமற்ற முறையில் இயங்கிய 3 உணவகங்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் அபராதம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மூலம் உணவுப் பொருள் விற்ற 8 கடைகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடா்ந்து, முக்கடல் சங்கமம் பகுதியில் உள்ள தற்காலிகக் கடை உரிமையாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட நியமன அலுவலா் செந்தில்குமாா் பங்கேற்று, அறிவுரைகள் வழங்கினாா்.