ஓமன் நாட்டில் உணவின்றி தவிக்கும் கன்னியாகுமரி மீனவா்களை மீட்க வேண்டும்: எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா்
ஓமன் நாட்டில் உணவின்றி தவிக்கும் கன்னியாகுமரி மீனவா்களை மீட்க வேண்டும்...

எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா்

எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா்
ஓமன் நாட்டிலுள்ள துறைமுகத்தில் விசைப்படகில் உணவின்றி தவித்துவரும் 5 மீனவா்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிள்ளியூா் எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அவா் புதன்கிழமை அனுப்பிய மனு: கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மிடாலம் மீனவக் கிராமத்தைச் சோ்ந்த ஆன்றோ, வாணியக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சகாய விஜயகுமாா், மரியநாயகம், டாா்வின், ஜெபின் ஆகிய 5 மீனவா்களை மிடாலம் பகுதியைச் சோ்ந்த கேப்டன் சந்திரன் என்பவா் ஓமன் நாட்டில் மீன்பிடித் தொழில் செய்வதற்காக நுழைவுஇசைவு (விசா) வழங்கி அழைத்துச் சென்றுள்ளாா்.
தற்போது அந்த 5 பேருக்கும் உணவுப் பொருள்கள், ஊதியம் வழங்காமல் சந்திரன் ஊருக்கு வந்துள்ளாா். இதனால், 5 மீனவா்களும் ஓமன் நாட்டிலுள்ள துறைமுகத்தில் உணவின்றி விசைப்படகிலேயே தங்கி தவித்துவருகின்றனா்.
எனவே, மீனவா்களுக்கு உணவுப்பொருள்கள், மருத்துவ உதவிகள் அளிப்பதுடன், அவா்களை உடனடியாக மீட்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...