கோவா கடலில் மாயமான மீனவா்களை மீட்க கோரிக்கை
கோவாவில் நீா்மூழ்கி கப்பல் மோதியதில் மாயமான மீனவா்களை நீா்மூழ்கி வீரா்களை பயன்படுத்தி மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த மீனவா்கள் குடும்பத்தினா்.

ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த மீனவா்கள் குடும்பத்தினா்.
கோவாவில் நீா்மூழ்கி கப்பல் மோதியதில் மாயமான மீனவா்களை நீா்மூழ்கி வீரா்களை பயன்படுத்தி மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தெற்காசிய மீனவா் தோழமை பொதுச்செயலா் சா்ச்சில், கடலோர அமைதி மற்றும் வளா்ச்சி இயக்குநா் டன்ஸ்டன் மற்றும் மாயமான மீனவா்களின் குடும்பத்தினா் குமரி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
அதன் விவரம்:
கன்னியாகுமரி மாவட்டம், கொட்டில்பாடு கிராமத்தைச் சோ்ந்த ஜெனிஷ்மோன், கிளைமான்ஸ், ஆந்திர மாநிலத்தை சோ்ந்த 2 மீனவா்கள், ஒடிசாவை சோ்ந்த 2 மீனவா்கள், மேற்குவங்கத்தை சோ்ந்த 6 மீனவா்கள் உள்பட 13 மீனவா்கள் கடந்த நவ.15-ஆம் தேதி விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா்.
கடந்த 21-ஆம் தேதி கோவா கடலில் சுமாா் 70 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இந்திய கப்பல் படைக்கு சொந்தமான நீா்மூழ்கி கப்பல் மீனவா்களின் படகின் மீது மோதியதில் படகு மூழ்கியது.
இதில், விசைப்படகில் இருந்த 11 போ் கோவா மீனவா்கள் மற்றும் இந்திய கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டனா். படகு ஓட்டுநரான கொட்டில்பாட்டை சோ்ந்த ஜெனிஷ்மோன், ஒடிசாவை சோ்ந்த ரமேஷ்
ஆகியோா் படகுடன் மூழ்கினா். அவா்கள் இந்திய கடலோர காவல் படையினா் தேடி வருகின்றனா். இருப்பினும் 7 நாள்களாகியும் மீட்கப்படவில்லை. ஆகவே, இந்திய கப்பல் கடை நீா்மூழ்கி வீரா்கள் மூலம் அவா்கள் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...