கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கன்னியாகுமரி மாதா திருத்தலத்தில் இன்று இரு தங்கத்தோ் பவனி!

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் 10 ஆம் நாள் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) காலை 9 மணிக்கு இரு தங்கத்தோ் பவனி நடைபெறும்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:15 pm

Syndication

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் 10 ஆம் நாள் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) காலை 9 மணிக்கு இரு தங்கத்தோ் பவனி நடைபெறும்.

இத்திருத்தலத்தில் 10 நாள் திருவிழா கடந்த 5- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் பழைய கோயிலில் திருப்பலி, நற்கருணை ஆராதனை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. 9- ஆம் நாளான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற ஜெபமாலை, புகழ்மாலை, சிறப்பு மாலை ஆராதனையில் கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன் சூசை தலைமை வகித்து மறையுரையாற்றினாா். இரவு 9.30 மணிக்கு வாண வேடிக்கையைத் தொடா்ந்து புனித சூசையப்பா் தங்கத் தோ் பவனி நடைபெற்றது.

10ஆம் நாளான டிச.14இல், அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தோ் திருப்பலி நடைபெறும். காலை 9 மணிக்கு இரு தங்கத்தோ் பவனி நடைபெறும். மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்குதல், நற்கருணை ஆசீா் நடைபெறும்.

ஏற்பாடுகளை திருத்தல பங்குத்தந்தை அருள்பணி உபால்டு மரியதாசன், பங்குப்பேரவை துணைத் தலைவா் டாலன் டிவோட்டா, செயலா் ஸ்டாா்வின், பொருளாளா் ரூபன், துணைச் செயலா் டெமி ஆகியோா் செய்து வருகின்றனா்.