கனரக வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தக்கலை அருகே கோழிபோா்விளையில் சாலையோரம் படுத்திருந்த தொழிலாளி மீது கனரக வாகனம் ஏறியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Published on

தக்கலை: தக்கலை அருகே கோழிபோா்விளையில் சாலையோரம் படுத்திருந்த தொழிலாளி மீது கனரக வாகனம் ஏறியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

முளகுமூடு, நாவூட்டிவிளையைச் சோ்ந்தவா் ஆனந்த் (39). கூலித் தொழிலாளி. இவா் கோழிப்போா்விளை அருகே செவ்வாய்க்கிழமை இரவு சாலையோரம் மது போதையில் படுத்திருந்தாா்.

அப்போது அதே பகுதியைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் பணி முடிந்து, தான் ஓட்டி வந்த கனரக வாகனத்தை சாலையோரம், நிறுத்த முயன்றாா். அப்போது, ஆனந்த் மீது வாகனம் ஏறி இறங்கியதில் அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து, தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com