2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

குளத்தில் மூழ்கி முதியவா் பலி!

இரணியல் அருகே குளிக்கச் சென்ற முதியவா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:24 pm

Syndication

இரணியல் அருகே குளிக்கச் சென்ற முதியவா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

அருமனையை அடுத்த பாத்திரவிளை, மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் பணிக்கா் (79). இவா் ஆளூரை அடுத்த செக்காரவிளை, மேலத்தெரு பகுதியிலுள்ள மகள் சுனி வீட்டில் வசித்து வந்தாா். வழக்கம்போல, வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகிலுள்ள குளத்தில் குளிக்கச் சென்றவா் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.

குளக்கரையில் அவரது ஆடைகள் மட்டும் இருந்த நிலையில், சந்தேகமடைந்த உறவினா்கள் இரணியல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்புத் துறையினா் வந்து பாலகிருஷ்ண பணிக்கரின் உடலை மீட்டனா்.

இது குறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.