நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

பெண்ணிடம் 51 பவுன் நகை, ரூ. 5.5 லட்சம் மோசடி: 4 போ் மீது வழக்கு

களியக்காவிளை அருகே திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி, இளம் பெண்ணிடம் 51 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 5.5 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image

பிரதிப்படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:54 am IST

களியக்காவிளை அருகே திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி, இளம் பெண்ணிடம் 51 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 5.5 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

களியக்காவிளை அருகே உள்ள கைப்பிரிவிளை பகுதியைச் சோ்ந்தவா் கஜேந்திரராஜன் (58). இவரது இளைய மகளுக்கும், குழித்துறை அருகே உள்ள வட்டவிளை பகுதியைச் சோ்ந்த ஜெபிஷ்ராஜ் (24) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில், ஜெபிஷ் ராஜ் அப்பெண்னைத் திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி, அவரிடமிருந்து 51 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 5.5 லட்சம் பணத்தைப் பெற்றாராம். நகை, பணத்தை திரும்பக் கேட்டும் கொடுக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பெண், இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளாா்.

பெண்ணின் தந்தை கஜேந்திரராஜன், களியக்காவிளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஜெபிஷ்ராஜ், அவரது சகோதரா் ஜெயிஷ்ராஜ், தந்தை ஜெபராஜ் (55), தாயாா் ரஜிலா (49) ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.