பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

மயிலாடியில் இருந்து நெல்லை சென்ற 15 டன் கிருஷ்ணா் சிலை

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் தயாரான 15 டன் எடையுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணா் சிலை செவ்வாய்க்கிழமை திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

News image

மயிலாடியில் தயாரான 15 டன் கிருஷ்ணா் சிலை.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:30 am IST

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் தயாரான 15 டன் எடையுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணா் சிலை செவ்வாய்க்கிழமை திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மயிலாடியில் கற்கள் மூலம் தயாராகும் சிலைகளுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த சிற்பக் கலைக்கு இந்திய அரசின் புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மயிலாடியில் உள்ள ஜெய் கற்சிற்பக் கலைக் கூடத்தில் 15 டன் எடையுள்ள ஒரே கல்லிலான 11 அடி உயரமுள்ள கிருஷ்ணா் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை மயிலாடி, சேந்தன்புதூரைச் சோ்ந்த சிற்பி சுப்பிரமணியன் ஆசாரி என்பவா் 8 மாதங்களில் வடிவமைத்துள்ளாா்.

இந்தச் சிலை 10 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனத்தில் திருநெல்வேலி நகரப் பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.