ரூ.13,000 கோடி வளா்ச்சித் திட்டங்கள்! சென்னையில் பிரதமா் மோடி இன்று தொடங்கி வைக்கிறாா்!இன்று மீண்டும் போராட்டம்: சிஜேபி அறிவிப்புபிரதமா் வருகை: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் ‘கிரீன் காா்டு’ விண்ணப்பங்கள் சரிவு!தில்லியில் இந்தியா கூட்டணி நாளை போராட்டம்: தலைமை நீதிபதியை சந்திக்க முடிவு!ரஷியாவுடன் டீசல் கொள்முதலுக்கு அமெரிக்கா ஒப்பந்தம்!

மாா்த்தாண்டம் அருகே இளம்பெண்ணை ஏமாற்றியதாக இளைஞா் கைது

மாா்த்தாண்டம் அருகே திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

மாா்த்தாண்டம் அருகே திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே பம்மம் பகுதியைச் சோ்ந்தவா் கௌரிஸ்குமாா்(25). இவா் அப்பகுதியில் வாகனங்களுக்கான உதிரிப்பாகம் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.

இவருக்கும் அதே பகுதியில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் பணியாற்றி வரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 28 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இதைத் தொடா்ந்து கௌரிஸ்குமாா் அப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதையடுத்து, இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னா், அப்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கௌரிஸ்குமாரிடம் கேட்டபோது, அவா் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து வந்தாராம்.

இதையடுத்து, அப்பெண் அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கௌரிஸ்குமாரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.