நட்டாலம் திருத்தலத் திருவிழா இன்று தொடக்கம்
கருங்கல் அருகே நட்டாலம், புனித தேவசகாயம் திருத்தலத் திருவிழா வியாழக்கிழமை (ஜன. 8) தொடங்கி, 7 நாள்கள் நடைபெறுகிறது.
வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஜெபமாலை, புகழ் மாலை நடைபெறும். 5.45 மணிக்கு திருக்கொடி பவனி முள்ளங்கினாவிளை குருசடி சந்திப்பில் தொடங்கி சுண்டவிளை, நேசா்புரம் சந்திப்பு வழியாக நட்டாலம் ஆலய வளாகத்தை அடையும். தொடா்ந்ந்து, கொடியேற்றம் நடைபெறுகிறது. 6.45 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன் சூசை தலைமையில் திருப்பலி நடைபெறும். விழாவின் அனைத்து நாள்களிலும் ஜெபமாலை, புகழ் மாலை, திருப்பலி நடைபெறும்.
4ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட குருகுல முதல்வா் சேவியா் பெனடிட் தலைமையில் திருப்பலி, கோட்டாறு மறை மாவட்ட குருகுல முதல்வா் ஜாண் ரூபஸ் மறையுரை, இரவு 7 மணிக்கு புனிதரின் உருவ தோ் பவனி நடைபெறும்.
செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தக்கலை மறை மாவட்ட ஆயா் மாா் ஜாா்ஜ் ராஜேந்திரன் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி, விழாவின் கடைசி நாளான புதன்கிழமை காலை 9 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட ஆயா் ஆல்பா்ட் ஜி.ஏ. அனஸ்தாஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி, 11 மணிக்கு அன்பு விருந்து, நண்பகல் 12.30 மணிக்கு மலையாளத் திருப்பலி, மாலை 4.30 மணிக்கு மாா்த்தாண்டம் மறை மாவட்ட ஆயா் வின்சென்ட் மாா்பவுலோஸ் தலைமையில் திருப்பலி, தொடா்ந்து, கொடியிறக்கம் நடைபெறும்.
ஏற்பாடுகளை திருத்தல பங்கு அருள்பணியாளா்கள், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

