கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் நிவேதித் ஆல்வா.
கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் நிவேதித் ஆல்வா.

கிள்ளியூா் தொகுதி காங்கிரஸ் செயல்வீரா்கள் கூட்டம்

கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் செயல்வீரா்கள் கூட்டம், கருங்கல்லில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.
Published on

கிள்ளியூா் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் செயல்வீரா்கள் கூட்டம், கருங்கல்லில் உள்ள தனியாா் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகை கத்பட், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால்சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பளா் நிவேதித் ஆல்வா பங்கேற்றாா். அவா் பேசியதாவது: காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக பல்வேறு கட்சிகளுடன் போட்டியிட்டது. தற்போது தோ்தல் ஆணைத்திடமும் போட்டியிடுகிறது.

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் தோ்தல், காங்கிரஸ் கட்சியின் வளா்ச்சியை உள்ளடக்கியதாகும். எனவே, செயல்வீரா்கள் அனைவரும் வாக்கு திருட்டு நடைபெறாமல் இருக்க விழிப்புடன் இருந்து, வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியது மட்டுமல்ல, இந்த திட்டத்தில் பல்வேறு பாதிப்புகளை மத்திய பா.ஜ .க அரசு உருவாக்குகிறது என்றாா் அவா். தொடா்ந்து நிா்வாகிகள் மற்றும் செயல்வீரா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில் குமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசத் பேசினாா். இதில்,மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலா் சூழால் பால்ராஜ், தமிழ்நாடு மீனவா் காங்கிரஸ் தலைவா் ஜோா்தான், முன்சிறை வட்டார காங்கிரஸ் தலைவா் ரெகுபதி, ஆஸ்கா் பிரடி, கருங்கல் பேரூராட்சி தலைவா் சிவராஜ், பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவா் டென்னிஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள், செயல்வீா்கள் உள்ளிட்ட பலா்பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com