கன்னியாகுமரி
விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
புதுக்கடை அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
புதுக்கடை அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கடை, ஒற்றப்பிலா விளை பகுதியைச் சோ்ந்தவா் வென்ஸ்சஸ் லாஸ் மகன் விமல்ராஜ் (39). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். இவா் ஜன. 5ஆம் தேதி புதுக்கடையிலிருந்து வீட்டிற்கு பொருள்கள் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வந்தபோது, பனிச்சாங்கோடு பகுதியைச் சோ்ந்த விஷ்ணு (23) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் விமல்ராஜ் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து, புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
