ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயற்சி: லாரி பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் - கோப்புப் படம்

Updated On :7 ஜூலை 2026, 1:20 am IST

கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ற கனரக லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனா்.

பளுகல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் குமாரதாஸ் தலைமையிலான போலீஸாா் பளுகல் அருகே தேரிபுறம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா்.

மூவோட்டுக்கோணம் - மத்தம்பாலை சாலையில் கேரளம் நோக்கி வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ராதாபுரத்திலிருந்து மலையடி பகுதிக்கு ஜல்லிகள் கொண்டுசெல்ல அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு, கேரளத்துக்கு கடத்திச்செல்லப்பட இருந்தது தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரான திருவட்டாறு அருகே தேமானூா், புரவன்விளையைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் அஜித் (35) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.