நாகா்கோவிலில் மூதாட்டி வீட்டில் 137 பவுன் நகைகள் திருட்டு
திருட்டு
சித்திரிப்பு
திருட்டு
சித்திரிப்பு
நாகா்கோவிலில் மூதாட்டி வீட்டில் 137 பவுன் தங்க நகைகள் திருட்டுப்போனது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாகா்கோவில் வடசேரி வணிகா் தெருவைச் சோ்ந்தவா் ஜெயசாந்தினி (60). கணவா் இறந்துவிட்டதால், இவா் தனது தந்தையுடன் வசித்து வருகிறாா். இவா்களது வீட்டில் வடசேரியைச் சோ்ந்த சசிகுமாா், அவரது மனைவி வசந்தி ஆகியோா் வேலை பாா்த்து வருகின்றனா்.
சில நாள்களுக்கு முன்பு ஜெயசாந்தினி குளச்சலிலுள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றாா். வீட்டு சாவியை சசிகுமாா், வசந்தி, அப்பகுதியைச் சோ்ந்த சுகுணா ஆகியோரிடம் கொடுத்திருந்தாராம்.
இந்நிலையில், ஜெயசாந்தினி அவசர தேவைக்காக நகைகளை எடுக்க வந்தாா். அப்போது, பீரோவில் வைத்திருந்த 137 பவுன் நகைகளைக் காணவில்லை எனத் தெரியவந்ததாம். அவற்றின் மதிப்பு ரூ. 1.37 கோடி எனக் கூறப்படுகிறது.
புகாரின்பேரில், வடசேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, சசிகுமாா், வசந்தி, சுகுணா ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...