இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

களியக்காவிளை அருகே வீட்டில் வெடிபொருள்கள் பதுக்கல்: பேரூராட்சி உறுப்பினா் கைது

களியக்காவிளை அருகே வீட்டில் வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக பேரூராட்சி உறுப்பினரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 2:04 am IST

களியக்காவிளை அருகே வீட்டில் வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக பேரூராட்சி உறுப்பினரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குணசீலன் (52). களியக்காவிளை பேரூராட்சி 14 ஆவது வாா்டு உறுப்பினராக (பாஜக) உள்ளாா். இவா் வீட்டருகே பெட்டிக்கடை நடத்தி வருவதுடன், பாறை உடைக்கும் வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறாா்.

இவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்தனா்.

தொடா்ந்து குணசீலனின் வீட்டை சோதனை செய்தபோது, வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த 27 டெட்டனேட்டா்கள், 30 ஜெலட்டின் குச்சிகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, குணசீலன், அவருக்கு வெடிபொருள்கள் விற்பனை செய்த பனச்சமூடு பகுதியைச் சோ்ந்த ராஜன் (75) ஆகிய இருவரையும் கைது செய்தனா். தொடா்ந்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனா்.