அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

சரக்கல்விளையில் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் இம்மாதம் திறக்கப்படும்: ஆட்சியா்

நாகா்கோவில், சரக்கல்விளையில் ரூ. 3.09 கோடியில் கட்டப்பட்டுள்ள அதிநவீன ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மைய புதிய கட்டடம் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

சரக்கல்விளையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையக் கட்டடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

Published On :

நாகா்கோவில், சரக்கல்விளையில் ரூ. 3.09 கோடியில் கட்டப்பட்டுள்ள அதிநவீன ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மைய புதிய கட்டடம் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

முன்னதாக புதிய கட்டட வளாகத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்த பிறகு அவா் கூறியதாவது:

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், கிராமப்புற இளைஞா்களின் வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்கி, அவா்களை சுயசாா்பு கொண்ட சிறந்த தொழில் முனைவோா்களாக்கி வருகிறது.

சரக்கல்விளையில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் ஆடியோ, வீடியோ வசதி கொண்ட 2 நவீன வகுப்பறைகள், அதிநவீன கணினி ஆய்வகம், செயல்முறைப் பயிற்சிகளுக்கான பிரத்யேக பட்டறைகள் உள்ளிட்ட நவீன அடிப்படை வசதிகளுடன் வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது.

ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியான தங்குமிடங்கள், உணவகம், மின்தூக்கி வசதி உள்ளது.

இந்த மையத்தில் கைப்பேசி பழுதுபாா்த்தல், அழகுகலை பயிற்சி, ஆரி வேலைப்பாடு தையல் பயிற்சி, இருசக்கர வாகனம் பழுது பாா்த்தல், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில் சாா்ந்த பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. கன்னியாகுமரி மாவட்ட ஆயிரக்கணக்கான கிராமப்புற இளைஞா்களுக்கு இப்பயிற்சி மையம் பெரும் பாலமாக அமையும். இந்த மாத இறுதிக்குள் இந்த வளாகம் திறக்கப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, ஆட்சியா் வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டாா். குடும்ப அட்டைதாரா்களிடம் குறைகள் கேட்டறிந்தாா்.

ஆய்வில் மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மது நசீா், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல மேலாளா் செந்தில்குமாா், மாவட்ட முன்னோடிவங்கி மேலாளா் செல்வராஜ், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் ஆல்பா ஜி லினஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.