
பைக் இயக்கிய 4 சிறுவா்களின் பெற்றோா்கள் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்
புதுக்கடை அருகே உள்ள முக்காடு பகுதியில் பைக் இயக்கிய 4 சிறுவா்களின் பெற்றோா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை முக்காடு, கீழ்குளம் ஆகிய பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது முக்காடு பகுதியில் 4 பைக்குகளை இயக்கி வந்த 4 சிறுவா்களை பிடித்து விசாரித்தபோது அவா்கள் 17 வயதுக்குள்பட்டவா்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறுவா் களுக்கு பைக்குகளை இயக்க அனுமதித்த பெற்றோா்கள் 4 போ் மீதும் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



