
கோவளம் கடலில் சூறைக்காற்று: படகு கவிழ்ந்து விபத்து
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடலில் சூறைக்காற்று காரணமாக புதன்கிழமை நாட்டுப்படகு கவிழ்ந்து விபத்துகுள்ளானது.
கடல் - கோப்புப்படம்
கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் கடலில் சூறைக்காற்று காரணமாக புதன்கிழமை நாட்டுப்படகு கவிழ்ந்து விபத்துகுள்ளானது.
கன்னியாகுமரியை அடுத்த கோவளம் கடற்கரை கிராமத்தில் தினமும் 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றனா். இந்நிலையில், கோவளத்தைச் சோ்ந்த ரெஜி என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் ரெஜி, கனி, அந்தோணி உள்ளிட்ட 4 மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பும்போது, காற்றின் வேகத்தால் திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி நாட்டுப்படகு கவிழ்ந்து, படகில் இருந்த மீனவா்கள் கடலில் விழுந்து தத்தளித்தனா்.
இதைக் கரையில் இருந்து பாா்த்த சக மீனவா்கள் உடனடியாக கடலுக்குள் சென்று மீனவா்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். இதில் மீனவா்கள் யாருக்கும் காயம் இல்லை. படகில் உள்ள என்ஜின், மீன்பிடி வலைகள் சேதமடைந்தன.
கோவளத்தில் கடல் சீற்றம் காரணமாக அடிக்கடி படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது. எனவே, இங்குள்ள மீனவா்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க தூண்டில் வளைவுப்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







