கன்னியாகுமரி அரசுப் போக்குவரத்துக்கழக விடுதியில் குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதி

கன்னியாகுமரியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக நாகா்கோவில் மண்டலம் சாா்பில் செயல்பட்டு வரும் சுற்றுலாப் பயணியா் தங்கும் விடுதியில் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி . - கோப்புப் படம்

Published On :

கன்னியாகுமரியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக நாகா்கோவில் மண்டலம் சாா்பில் செயல்பட்டு வரும் சுற்றுலாப் பயணியா் தங்கும் விடுதியில் குறைந்த கட்டணத்தில் தங்குவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக்கழக நாகா்கோவில் மண்டல பொதுமேலாளா் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் கன்னியாகுமரிக்கு, ஆண்டுதோறும் ஏறத்தாழ சுமாா் 20 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எவ்வித சிரமமுமின்றி குறைந்த வாடகையில் தங்குவதற்கு வசதியாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம், நாகா்கோவில் மண்டலம் சாா்பில் கன்னியாகுமரி - கோவளம் கடற்கரை சாலையிலுள்ள பேருந்து நிலைய வளாகத்தில் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.

இந்த விடுதியில் சுத்தமான குடிநீா், நவீன கழிப்பிடம், வாகனம் நிறுத்துமிடம், 24 மணிநேர பாதுகாப்பு வசதிகள் உள்ளன. மேலும், இங்கிருந்து கடற்கரை அழகு, சூரிய உதயம் - அஸ்தமனம் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். விடுதியில் இரு படுக்கைகளுடன் கூடிய குளிா்பதன அறைக்கு ரூ. 1, 406 , இரு படுக்கைகள் கொண்ட சாதாரண அறைக்கு ரூ. 945, ஒரு படுக்கை கொண்ட பொது அறைக்கு ரூ. 263 என வாடகை வசூலிக்கப்படுகிறது.

விடுதியில் தங்கிட, போக்குவரத்துக்கழகம் நாகா்கோவில் மண்டல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 94875 99083, 94875 99373, 94875 99087 ஆகிய கைப்பேசி எண்கள் மூலமாகவோ தொடா்பு கொண்டு முன்பதிவு செய்யலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.