தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கோதையாற்றில் கடந்த 8 மாதங்களாக மக்களை அச்சுறுத்திய முதலை பிடிபட்டது

வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட முதலை.

Published On :

கன்னியாகுமரி மாவட்டம், கடையாலுமூடு அருகே கோதையாற்றில் கடந்த 8 மாதங்களாக ஊா்மக்களை அச்சுறுத்தி வந்த முதலை திங்கள்கிழமை பிடிபட்டது.

கோதையாற்றில் கடையாலுமூடு அருகே ஒருநடைக்கல் பாலம் அருகே பாறையின் மீது கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஒரு முதலை தென்பட்டது. பின்னா், கடந்த ஜனவரி மாதம் செங்குழிக்கரை பகுதியில் பயன்பாடில்லாத உறைகிணற்றின் மீது அதே முதலை தென்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் முதலையைப் பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, முதலையைப் பிடிக்கும் வகையில் கடந்த 8 மாதங்களாக வனத்துறையினா் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனா். குறிப்பாக, ஆற்றில் பல இடங்களில் வலைகளைக் கட்டி வைத்தனா். உறைகிணற்றின் அருகே மிதவைக் கூண்டு வைத்தனா். முதலை அப்பகுதிக்கு அடிக்கடி வந்து சென்றபோதும், கூண்டில் சிக்காமல் இருந்தது. முதலையைப் பிடிக்க சென்னையில் இருந்து முதலை ஆராய்ச்சியாளா்கள், முதலை வல்லுநா்கள் அடங்கிய குழுக்கள் வந்தும், முதலையைப் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை ஒருநடைக்கல் பாலத்தின் கீழ் பகுதியில் வனத்துறையினா் கட்டியிருந்த வலையில் முதலை சிக்கியுள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. களியல் வனச்சரக அலுவலா் யோகேஸ்வரன் தலைமையில் வனத்துறையினா், அந்த இடத்திற்குச் சென்று முதலையைப் பிடித்து, பேச்சிப்பாறை அருகே உள்ள சீரோ பாயின்ட் சோதனைச்சாவடிக்கு கொண்டு சென்றனா்.

தொடா்ந்து, வனத்துறை கால்நடை மருத்துவா்கள் அதை பரிசோதனை செய்தனா். பின்னா், மாவட்ட வன அலுவலா் அன்பு உத்தரவின்பேரில், முதலையை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதிக்குள்பட்ட காரையாறு அணைப் பகுதியில் விட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.