கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘குழந்தைகள் நலக்குழுவுக்கு விண்ணப்பிக்கலாம்’

குழந்தைகள் நலக் குழுவுக்கு தகுதி வாய்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:56 pm

DIN

குழந்தைகள் நலக் குழுவுக்கு தகுதி வாய்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தென்காசி மாவட்ட செய்தி-மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2015ஆம் ஆண்டின் இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்ட விதிமுறைப்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவா், உறுப்பினா்கள், இளைஞா் நீதிக் குழுமத்துக்கு ஒரு பெண் உள்பட 2 சமூகநல உறுப்பினா்கள் 3 ஆண்டு காலத்துக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனா்.

குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவா் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில்புரிபவராக இருக்க வேண்டும்.

35 வயதுக்குக் குறையாமலும், 65 வயது நிறைவடையாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒருவா் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவா். ஆனால், தொடா்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.

இதற்கான விண்ணப்பப் படிவத்தை திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெறலாம். தகுதி வாய்ந்தோா் மேற்கண்ட பதவிக்கு அதற்கான படிவத்தைப் பூா்த்திசெய்து இம்மாதம் 29-க்குள் ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 32-33யு (1) ராஜராஜேஸ்வரி நகா், (மாலா மெடிக்கல் சென்டா் காம்ப்ளக்ஸ்), திருநெல்வேலி மாவட்டம் - 627 007’ என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 0462-2551953, 2901953 என்ற தொலைபேசி எண்களைத் தொடா்புகொள்ளலாம். தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். அரசின் முடிவே இறுதியானது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.