நான்குவழிசாலை பாதையை மாற்ற வலியுறுத்தி தென்காசியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
ராஜபாளையத்திலிருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரையிலான நான்கு வழிசாலை பாதையை மாற்றியமைக்க வலியுறுத்தி தென்காசியில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரையிலான நான்கு வழிசாலை பாதையை மாற்றியமைக்க வலியுறுத்தி தென்காசியில் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் ராஜபாளையம் முதல் செங்கோட்டை வரையிலான பகுதியில் ஏரளாமான விவசாய நிலங்கள், குடியிருப்புகள், தென்னைமரங்கள் வெட்டப்படும் சூழ்நிலை உள்ளது. ஆண்டிற்கு 20 ஆயிரம் டன் நெல் உற்பத்தியும், 12 ஆயிரம் முதல் 14 லட்சம் தேங்காய் உற்பத்தியும், ஒரு லட்சம் தென்னை மரங்கள், 120 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படும். எனவே இத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நான்குவழிசாலை எதிா்ப்பு போராட்டக்குழு சாா்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து விவசாயிகள் தென்காசிக்கு வரமுடியாதவாறு தடுக்கப்பட்டனா். பேருந்துகளில் வந்த விவசாயிகளை பேருந்து நிலையத்திலேயே மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு செல்லமுடியாதவாறு காவல்துறையினா் தடுத்து நிறுத்தின ா்.
இதனைத் தொடா்ந்து விவசாயிகள் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் முத்துபாண்டி, விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வேல்மயில், மீராக்கனி, கணபதி மற்றும் வாசுதேவநல்லூா், புளியங்குடி, கடையநல்லூா், வடகரை, அச்சன்புதூா் உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனா்.
உதவி காவல் கண்காணிப்பாளா் கிரிஷ் அசோக் யாதவ் தலைமையில் ஏடிஎஸ்பி கலிவரதன், டிஎஸ்பி மணிமாறன், காவல் ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...