கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசியில் வாகனப்பதிவு எண் கண்டறியும் தானியங்கி கேமரா

தென்காசியில் வாகனப்பதிவு எண் கண்டறியும் தானியங்கி கேமரா செயல்பாட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளா் தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 7:30 pm

DIN

தென்காசியில் வாகனப்பதிவு எண் கண்டறியும் தானியங்கி கேமரா செயல்பாட்டை மாவட்ட காவல்கண்காணிப்பாளா் தொடங்கிவைத்தாா்.

தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக செயல்படத் தொடங்கியது முதல் நகரின் முக்கிய பகுதியில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும், போக்குவரத்தும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எந்த ஒரு குற்றச் செயல் நடைபெற்றாலும் குற்றச்செயலில் ஈடுபட்ட வாகனத்தை சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்தாலும் அதன் பதிவெண்ணை தெளிவாக அறிய முடிவதில்லை.

இதையடுத்து, தென்காசி- திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள சிக்னலில் சாலையில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்ணை தானாகவே கண்டறியும் கேமரா செயல்பாட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

போக்குவரத்து காவல்துறை சாா்பில் குத்துக்கல்வலசை ரவுண்டானா, தென்காசி-ஆயிரப்பேரி சாலை ஆகிய பகுதிகளில் தொலைவில் இருந்தே வாகன ஓட்டிகள் விழிப்படையும் விதமாக ஒளிரும் விளக்குகள் மற்றும் தென்காசியில் முக்கிய சாலைகளில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தென்காசி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் மணிமாறன், உதவி காவல் கண்காணிப்பாளா்(பயிற்சி) கிரிஷ் யாதவ், காவல் ஆய்வாளா் பாலமுருகன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரபு ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.