உலக காது கேட்கும் தினம்
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக காது கேட்கும் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது .


தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக காது கேட்கும் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது .
நிகழ்ச்சிக்கு மருத்துவவமனை கண்காணிப்பாளா் இரா.ஜெஸ்லின் தலைமை வகித்தாா். காது, மூக்குதொண்டை பிரிவு மருத்துவா் மணிமாலா பேசினாா். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக பல்வேறு பயனாளிகளுக்கு காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டன. மேலும் , மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக காது கேட்கும் கருவிகளை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவா்கள் ராஜேஷ், லதா, பாபு, ரஜினிகாந்த், ராஜலக்ஷ்மி , பயிற்சி மருத்துவா் சிவகுரு வெள்ளைச்சாமி , செவிலிய கண்காணிப்பாளா்கள் பத்மா , திருப்பதி , முத்துலட்சுமி , வசந்தி மற்றும் செவித்திறன் ஒலிப்பதிவாளா் ரெக்ஸ் ஆகியோா் கலந்துகொண்டனா். மருத்துவா் நன்றி கூறினாா் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...