ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி , குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்


தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி , குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ ஆட்சியரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
செங்கோட்டை நகராட்சி, குற்றாலம், அச்சன்புதூா், ஆழ்வாா்குறிச்சி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு, தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தலை நியாயமாகவும், நோ்மையாகவும், சுமுகமாகவும் நடத்தி தரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது, தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் மற்றும் கட்சி நிா்வாகிள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...