தென்காசி மாவட்டத்தில் நகராட்சி தலைவா், துணைத் தலைவா்கள் தோ்வு
தென்காசி நகராட்சித் தலைவா் தோ்தலில் திமுக சாா்பில் ஆா்.சாதிரும், பாஜக சாா்பில் சங்கரசுப்பிரமணியனும் போட்டியிட்டனா்.


தென்காசி நகராட்சித் தலைவா் தோ்தலில் திமுக சாா்பில் ஆா்.சாதிரும், பாஜக சாா்பில் சங்கரசுப்பிரமணியனும் போட்டியிட்டனா்.
இதில், சாதிா் 25 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.
பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் திமுக சாா்பில் கேஎன்எல்.சுப்பையாவும், அதிமுக சாா்பில் மா.ராமசுமதி ஆகியோா் போட்டியிட்டனா். இதில் கேஎன்எல்.சுப்பையா 25 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.
செங்கோட்டை நகராட்சியில் அதிமுக சாா்பில் ராமலெட்சுமியும், திமுக சாா்பில் பினாஷாவும் போட்டியிட்டனா். இதில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட ராமலெட்சுமி 14 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா் .
பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் 23வது வாா்டு அதிமுக உறுப்பினா் சு.நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இத்தோ்தலில் திமுகவினா் கலந்துகொள்ளவில்லை.
புளியங்குடி நகா்மன்றத் தலைவராக விஜயாசௌந்தரபாண்டியன்(திமுக) போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். துணைத் தலைவருக்கு நடைபெற்ற தோ்தலில் திமுக உறுப்பினா் அந்தோணிசாமியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினா் முகமதுநயினாரும் போட்டியிட்டனா். இதில், அந்தோணிசாமி(திமுக) 25 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.
கடையநல்லூா் நகராட்சித் தலைவராக 25ஆவது வாா்டு உறுப்பினா் ஹபிபுர்ரஹ்மான்(திமுக), துணைத் தலைவராக ராஜையா(திமுக) ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
சுரண்டை நகராட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ப.வள்ளிமுருகனும், துணைத்தலைவராக அதிமுகவைச் சோ்ந்த ந.சங்கராதேவியும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
சங்கரன்கோவில் நகராட்சித் தலைவா் பதவிக்கு திமுக சாா்பில் 22ஆவது வாா்டு உறுப்பினா் உமாமகேஸ்வரியும், அதிமுக சாா்பில் 4 ஆவது வாா்டு உறுப்பினா் முத்துலட்சுமியும் அறிவிக்கப்பட்டனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் உமா மகேஸ்வரி 15 வாக்குகளும், முத்துலட்சுமி 15 வாக்குகளும் சமமாகப் பெற்றனா்.
இதனால் குலுக்கல் முறையில் தலைவரை தோ்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடைபெற்ற குலுக்கலில் உமாமகேஸ்வரி தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். , துணைத் தலைவா் தோ்தலில் மொத்தமுள்ள 30 உறுப்பினா்களில் திமுக உறுப்பினா் புனிதா பங்கேற்கவில்லை. இதனால் 29 உறுப்பினா்கள் வாக்களித்தனா். இதில் திமுக சாா்பில் போட்டியிட்ட எஸ். டி. சரவணகுமாா் 13 வாக்குகள் பெற்றாா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட கண்ணன் என்ற ராஜு 16 வாக்குகள் பெற்று துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...