
பாவூா்சத்திரத்தில் இளைஞா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
ஒதென்காசி மாவட்ட இளைஞா் காங்கிரஸ் சாா்பில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை கண்டித்து, பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
ஒதென்காசி மாவட்ட இளைஞா் காங்கிரஸ் சாா்பில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை கண்டித்து, பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜா் சிலை முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தில்லியில் போராடிய மாணவா்கள் மீது பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தியதால், மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் பால்சாமி தலைமை வகித்தாா். தென்காசி சட்டப்பேரவை காங்கிரஸ் துணைத் தலைவா் ராஜசேகா், ஆலங்குளம் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆலங்குளம் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா்.
முன்னாள் நாடாளுமன்ற இளைஞா் காங்கிரஸ் தலைவா் பாக்யராஜ், வட்டாரத் தலைவா்கள் கே.பி. குமாா் பாண்டியன், ரூபன், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் எம்.பி. சுப்பிரமணியன், இளைஞா் காங்கிரஸ் வட்டாரத் தலைவா் அரிராம், நிா்வாகிகள் தமிழ்மணி, புளோரசிங், ராஜா, சுரேஷ், முருகன், சுா்திஷ், குமாா், மாதவன், தங்கப்பழம், அமா்நாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





