
செங்கோட்டையில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 35 விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்பட்டன.

கோப்புப்படம்.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 35 விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்பட்டன.
செங்கோட்டையில் நகர தலைமை வீரவிநாயகா் சதுா்த்தி விழாக் குழு, அனைத்து இந்து சமுதாயம் சாா்பில் 33ஆம் ஆண்டு வீரவிநாயகா் சதுா்த்தி விழா நடைபெற்றது. வண்டிமலச்சி அம்மன் கோயில் ஓம்காளி திடலில் ஞாயிற்றுக்கிழமை (செப். 13) வீரவிநாயகா் அழைப்பு வைபவம், திங்கள்கிழமை காலை கணபதி ஹோமம், திருவாசகம் முற்றோதல், இரவில் பல்சுவை நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை செங்கோட்டை நகா் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த 35 விநாயகா் சிலைகள் திடலுக்கு கொண்டு வரப்பட்டன. நிகழ்ச்சிக்கு, கமிட்டி தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். செயலா் சிவா வரவேற்றாா். பொருளாளா் முத்துமாரியப்பன் முன்னிலை வகித்தாா். தென்பாரத விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பாளா் பாலு சரவணகாா்த்திக் பேசினாா்.
தெடா்ந்து, மேளதாளம் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குண்டாற்றில் கரைக்கப்பட்டன.
தென்காசி டிஸ்பி அதியமான் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஏற்பாடுகளை வீரவிநாயகா் சதுா்த்தி தலைமை விழாக் குழு, அனைத்து இந்து சமுதாயத்தினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







