தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

மேலப்பாளையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த கோரிக்கை

மேலப்பாளையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

மேலப்பாளையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் மேலப்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது. கட்சியின் நகரத் தலைவர் ஹாபீஸ் முகைதீன் அப்துல்காதர் தலைமை வகித்தார். நகரப் பொருளாளர் மில்லத் காஜா மைதீன், மாவட்ட துணைத் தலைவர் நாகூர்கனி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் ஜெ.முகம்மதுஜாகிர் வரவேற்றார். மாவட்டத் தலைவர் எல்.கே.எஸ்.மீரான்மைதீன், மாவட்டச் செயலர் பாட்டப்பத்து எம்.முகம்மதுஅலி, இலைஞரணிச் செயலர் எம்.கடாபி உள்பட பலர் பேசினர்.
தீர்மானங்கள்: மேலப்பாளையத்தில் உள்ள படித்த இளைஞர்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலப்பாளையம்-மேலநத்தம் இடையே பாளையங்கால்வாயில் கட்டப்பட்டு வரும் பாலத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும். மேலப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் குப்பை சேகரிப்புப் பணிகளை இரவில் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.