இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ம.தி.தா. இந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு

திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை, பரிசளிப்பு விழா அப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. 

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை, பரிசளிப்பு விழா அப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. 
கல்விச் சங்கம், அ.லெ.சுப்பிரமணியன் நினைவு அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கல்விச் சங்கப் பொருளாளர் ப.தி. சிதம்பரம் தலைமை வகித்தார். வழக்குரைஞர் கோ. மணிவண்ணன்,  "எங்கேயும் வெளிச்சம்' எனும் தலைப்பில் பேசினார்.
விழாவில், ம.தி.தா. இந்துக் கல்லூரி மாணவர்கள் 9 பேர், பள்ளி மாணவர்கள் 12  பேர் உள்பட 21 பேருக்கு கல்வி உதவித் தொகை,  பள்ளி மாணவர்கள் 24 பேருக்கு சீருடை, கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏ.எல்.எஸ். லட்சுமணன் எம்எல்ஏ, கல்லூரி முதல்வர் அ. சுப்பிரமணியன், பள்ளித் தலைமையாசிரியர் சு. வேல்முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
கல்விச் சங்க செயலர் மு. செல்லையா வரவேற்றார். ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ.எல்.எஸ். சண்முகம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.