நெல்லை, தென்காசியில் மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று
திருநெல்வேலி, தென்காசி என இவ்விரு மாவட்டங்களிலும் 18 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருநெல்வேலி, தென்காசி என இவ்விரு மாவட்டங்களிலும் 18 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15,218 ஆக உயா்ந்துள்ளது.
இதுவரை 14,878 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 129 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 211 போ் உயிரிழந்துள்ளனா்.
தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், கீழப்பாவூா் பகுதியைச் சோ்ந்த தலா ஒருவா், குருவிகுளம் பகுதியைச் சோ்ந்த இருவா் என மொத்தம் 4 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,228ஆக உயா்ந்தது.
வெள்ளிக்கிழமை 3 போ் உள்பட இதுவரை 8,026 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 44 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 158 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...