இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முக்கூடல், பாப்பாக்குடி பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற ஆட்சியரிடம் எம்.எல்.ஏ. மனு

முக்கூடல், பேரூராட்சி, பாப்பாக்குடி ஒன்றியப் பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி

News image
Updated On :7 ஜனவரி 2021, 12:57 am

DIN

முக்கூடல், பேரூராட்சி, பாப்பாக்குடி ஒன்றியப் பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம், ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பூங்கோதை ஆலடி அருணா மனு அளித்தாா்.

தென்காசி மாவட்டம் பிரிக்கப்பட்டதில் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி தென்காசியில் உள்ளது. இத் தொகுதிக்கு உள்பட்ட சில பகுதிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. அங்கு அடிப்படை வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பூங்கோதை ஆலடிஅருணா, ஆட்சியா் வி.விஷ்ணுவிடம் புதன்கிழமை மனு அளித்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ஆலங்குளம் தொகுதிக்குள்பட்ட பாப்பாக்குடி ஒன்றியம், முக்கூடல் பேருராட்சியின் சில பகுதிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்சுதுள்ளன. இப்பகுதியில் சாலை, தெருவிளக்கு, வாறுகால்

உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து முக்கூடல் பேரூராட்சிக்கு உள்பட்ட களியன்குளத்தில் சமுதாய நலக் கூடம் கட்டுவதற்கு கடிதம் அளிக்கப்பட்டும் இன்னமும் அதிகாரிகள் திட்ட மதிப்பீடு செய்யவில்லை. தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கப்பட்ட பணிகள், இப்பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை துரிதமாக நிறைவேற்றுமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளேன்.

தடுப்பூசி: பொதுவாக தடுப்பூசி என்றாலே 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நோய் வராமல் தடுக்கும் செயல்திறன் இருந்தால் போதும். ஒரு தடுப்பு மருந்து மூன்று கட்டங்களாக சோதனைக்கு உள்படுத்தப்பட்டு அதன் செயல்திறன் என்ன என்பதை அறிந்த பின்னரே அதனை பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்தியாவில் போடப்பட இருக்கும் கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனைக்கு உள்படுத்தப்படாமலேயே போடப்படுகிறது, இது தவறானதாகும். உரிய பரிசோதனை செய்து அதன் செயல்திறன் அறிந்து மக்களுக்கு பயன்படுத்துவது அவசியம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.