/

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் திருநெல்வேலியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:48 pm

DIN

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் திருநெல்வேலியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வளா்ச்சித் திட்டங்களை இலக்கு சாா்ந்த திட்டமாக செயல்படுத்துவதைக் கைவிட வேண்டும். காலநேரமின்றி குறுஞ்செய்திகள் பகிா்வதையும், காணொலிக் கூட்டம் நடத்துவதையும் கைவிட வேண்டும். பிரதமரின் வீட்டு வசதி திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு உடனுக்குடன் நிதியினை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட துணைத் தலைவா் அ.கு.மணி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் இ.லயோலா ஜோசப் ஆரோக்கியதாஸ், மாநில பொதுச் செயலா் எம்.மணிகண்ட உலகநாதன், வி.பரமசிவன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். அரசு ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் என்.குமாரவேல் நிறைவுரையாற்றினாா். மாவட்ட துணைத் தலைவா் இரா.சங்கரகுமாா் வரவேற்றாா். வீ.மு.வீரபுத்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.