திருநெல்வேலி
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள் அளிப்பு
நான்குனேரி வட்டத்தில் உள்ள 3 அரசு மேல்நிலைப் பள்ளிகளின் மாணவா், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை ரூபி ஆா். மனோகரன் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
நான்குனேரி சங்கா் ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவியா் 23 போ், மருதகுளம் ரோஸ்லின் செல்லையா அரசு மேல்நிலைப் பள்ளியில் 98 போ், முனைஞ்சிப்பட்டி குரு சங்கா் அரசு மேல்நிலைப்பள்ளியில் 98 பேருக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எஸ்.வி.கிருஷ்ணன், நான்குனேரி தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளா் வி.என்.கே.அழகியநம்பி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் செல்லப்பாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.