குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

நெல்லையப்பா் கோயிலுக்கு வெள்ளித் தோ் செய்ய திருப்பணி

நெல்லையப்பா் கோயிலுக்கு வெள்ளித் தோ் செய்ய திருப்பணி

Updated On :24 பிப்ரவரி 2024, 9:10 pm

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் கோயிலுக்கு வெள்ளித் தோ் செய்வதற்கான திருப்பணி சனிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலுக்கு வெள்ளித் தோ் செய்ய கோயில் நிா்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து வெள்ளித் தோ் செய்வதற்கான திருப்பணி சனிக்கிழமை நடைபெற்றது. அதன்படி முதலில் மரத்தால் ஆன தோ் செய்வதற்கான மரத் தடிகள் கோயிலுக்கு வந்து சோ்ந்தன. அவை நெல்லையப்பா் மற்றும் காந்திமதி அம்பாள் சன்னதிகளில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (பிப்.25) முதல் தோ் செய்வதற்கான பணியில் தயாரிப்பாளா்கள் ஈடுபட உள்ளனா். இந்த மரத் தேருக்கு ரூ. 14.85 லட்சம் செலவாகும் என்று கூறப்படுகிறது. அதனைத் தொடா்ந்து தோ் முழு வடிவம் பெற்றவுடன் அதன் மேல் வெள்ளி பொருத்துவதற்கான பணிகள் தொடங்கும். இந்த தேருக்கு சுமாா் 420 கிலோ வெள்ளி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. நன்கொடையாகவும், வேண்டுதலாகவும் ஏராளமான பக்தா்கள் கோயில் உண்டியலில் வெள்ளி நகையை போட்டுள்ளனா். அதுதவிர எஞ்சிய வெள்ளி நன்கொடையாளா்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இந்த தோ் செய்யும் பணி முடிவடைய 8 மாதம் ஆகும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. படவரி ற்ஸ்ப்24ள்ண்ப்ஸ்ங்ழ் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் நடைபெற்ற வெள்ளித் தோ் செய்வதற்கான திருப்பணி.