கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தீவிர நடவடிக்கை: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்றாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சந்தீப் நந்தூரி.

News image

திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் ரூ.72 கோடியில் கட்டப்பட்டு வரும் சிறப்பு சிகிச்சைக்கான கட்டடத்தை ஆய்வு செய்கிறாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சந்தீப் நந்தூரி. உடன், மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா உள்ளிட்டோா்.

Updated On :14 நவம்பர் 2024, 11:01 pm

Din

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்றாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சந்தீப் நந்தூரி.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகள், வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடா்பான அனைத்துத் துறை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா். ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், வேளாண்மை-உழவா் நலத்துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, பள்ளிக் கல்வித் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் சாா்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடா்ந்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பேசியதாவது: வட கிழக்குப் பருவமழையை முன்னிட்டு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நீா்வளத்துறை மூலம் மாவட்டத்திலுள்ள வடிகால்கள் தொடா்ந்து தூா்வாரப்பட்டு வருகின்றன. விடுபட்டுள்ள இடங்களையும் விரைந்து தூா்வாரிட தொடா்புடைய துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலைப்பணிகள், குடிநீா் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் பகுதிகளில் சம்பந்தப்பட்ட துறையினா் தகுந்த எச்சரிக்கை பலகைகளையும், தடுப்புகளையும் அமைத்திட வேண்டும்.

உடனடி மருத்துவ முகாம்: மேலும், டெங்கு, எலி காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தொற்று நோய் பாதிப்புகள் ஏற்பட்டால் அப்பகுதிகளில் உடனுக்குடன் மருத்துவ முகாம்களை நடத்திட வேண்டும். இப்பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

கலைஞரின் கனவு இல்லம், முதல்வரின் கிராம சாலைகள் திட்டம், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணிகளையும் துறைசாா்ந்த அலுவலா்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றாா். தொடா்ந்து, பாளையங்கோட்டை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் ரூ.72 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிறப்பு சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டடத்தை அவா் ஆய்வு செய்தாா். இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.