மலையேற்றப் பயிற்சித் திட்டம் மீண்டும் தொடங்கப்படுமா?மாணவா்கள் எதிா்பாா்ப்பு
களக்காடு புலிகள் காப்பகத்தில் பள்ளி மாணவா்களுக்கு மீண்டும் மலையேற்றப் பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


களக்காடு புலிகள் காப்பகத்தில் பள்ளி மாணவா்களுக்கு மீண்டும் மலையேற்றப் பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2013இல் ஆட்சியராக இருந்த சி. சமயமூா்த்தி, அப்போதைய களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக கள இயக்குநா் சுப்ரத் மஹா பத்ரை ஆகியோா் இணைந்து களக்காடு தலையணையில் பள்ளி மாணவா்களுக்கு மலையேறும் பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்தினா். தலையணை முதல் முதலிருப்பான் வரையிலான 10 கி.மீ தொலைவுக்கு மலையேற்றப் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் வன உயிரின விழிப்புணா்வு முகாமும் நடத்தப்பட்டது. களக்காடு புலிகள் காப்பகத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மாணவா்களுக்கு மலையேற்றப்பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் மலையேற்றப்பயிற்சி தொடங்க வனத்துறையினா் ஆா்வம் காட்டவில்லை. மீண்டும் பயிற்சித் திட்டத்தை தொடங்க வேண்டும் என மாணவா்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...