இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

எம்.ஜி.ஆா். நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவிப்பு

எம்.ஜி.ஆா். நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

News image
~
Updated On :24 டிசம்பர் 2025, 11:17 pm

தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆா். நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து புதன்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

அதிமுக சாா்பில் திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆா்.சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநில அமைப்புச் செயலா் சுதா பரமசிவன், மாவட்ட அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், எம்ஜிஆா் மன்ற மாநில இணைச் செயலா் கல்லூா் இ. வேலாயுதம், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்ட், எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் பால் கண்ணன், எம்ஜிஆா் இளைஞா் அணி மாநில துணைச் செயலா் ஹரிஹர சிவசங்கா், பகுதி செயலா் காந்தி வெங்கடாசலம், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்க மண்டல செயலா் மனோகரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் சாா்பில் திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் ஜெயச்சந்திரன் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளா் முரசு மணி, துணைச் செயலா்கள் ஆனந்தமணி, தவசி தம்பா, சுடலைமுத்து, மேலப்பாளையம் பகுதி செயலா் குறிச்சி குட்டி, மகாராஜன், சதீஷ், மாவட்ட மகளிா் அணி செயலா் அருள்மேரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Story image