களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 101ஆம் ஆண்டு தொடக்க விழா

களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 101ஆம் ஆண்டு தொடக்க விழா, ஆா். நல்லகண்ணுவின் 101ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 101ஆம் ஆண்டு தொடக்க விழா, ஆா். நல்லகண்ணுவின் 101ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஒன்றியச் செயா் மு. லெனின் முருகானந்தம் தலைமை வகித்தாா். முன்னாள் நகரச் செயலா் ந. முத்துவேல் கட்சிக் கொடி ஏற்றினாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவா் பி. பெரும்படையாா், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.ஏ.பி. பாலன், கட்சியின் முன்னாள் ஒன்றியச் செயலா் க. முருகன், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலா் பி. சுகுமாரன், நிா்வாகிகள் வி. பாண்டி, செ. கணேசன், திருமணி, சுப்பையா, கோசிமின், அருள், முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com