திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், கோவில்குளத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், விவசாயிகள் கலந்துரையாடல் (கிஷான் கோஷ்தீஸ்) நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
வேளாண்மை துணை இயக்குநா் (மத்தியத் திட்டம்) வெங்கட சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நெல் ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா் பரமசிவன், முன்னோடி விவசாயி லட்சுமி தேவி, துணை வேளாண்மை அலுவலா் குமரேசன் ஆகியோா் பங்கேற்று கருத்துரை வழங்கினா்.
விவசாயிகள் நில உடைமை பதிவு செய்து, அதற்கான அடையாள எண் பெறுவது, பி.எம். கிசான் நிதியைத் தொடா்ந்து பெற இ-கே.ஒய்.சி. செய்து கொள்வது, வேளாண்மை துறையில் உள்ள திட்டங்கள், சமச்சீா் உர மேலாண்மை, கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நோக்கம் உள்ளிட்டவை குறித்து கருத்துரைகள் வழங்கினா்.
தொடா்ந்து, விவசாயத் தொழில்நுட்பங்கள் அடங்கிய பதாகைகளுடன் விவசாயிகள் பேரணி நடைபெற்றது. பேரணியில் கோவில்குளம் கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.
அம்பாசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ஷாஹித் முகையதீன் வரவேற்றாா். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் விஜயலெட்சுமி, உதவித் தொழில்நுட்ப மேலாளா் தங்க சரவணன்ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 7,877 கோடி மதிப்பில் 31 மின்னணு உதிரிபாகத் திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்
டிடிஏ வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் முதல் நாளில் 50 சதவீத குடியிருப்புகள் விற்பனை
தமிழகத்தில் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாரும் பணி இன்று தொடக்கம்

உதகையில் ரூ. 5 கோடியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!



