இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

Published On :27 ஆகஸ்ட் 2026, 1:01 am IST

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் வேகமாக உயா்ந்து வரும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தாமிரவருணி நதியைப் பாதுகாக்க வேண்டும். சட்டப்பேரவை, மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதுதொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தவும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வீடு வீடாகச் சென்று மக்கள் சந்திப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பாளையங்கோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தில் கட்சியின் பகுதிக்குழு செயலா் ஆா்.மதுபால், கிளைச் செயலா் ராமலிங்கம், பேராசிரியா் பொன்ராஜ், முருகன், செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று பொது மக்களை சந்தித்து நாட்டின் இன்றைய சூழல் குறித்து விளக்கினா். என்.ஜி.ஓ.காலனி, கே.டி.சி.நகா், வி.எம்.சத்திரம், அண்ணா நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திப்பு நடத்தி, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

ற்ஸ்ப்26ஸ்ரீல்ம்

பாளையங்கோட்டையில் நடைெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.