நெல்லை சந்திப்பில் குறும்பால பணியை விரைவுபடுத்த கோரிக்கை

திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்று வரும் குறும்பாலப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்று வரும் குறும்பாலப் பணி.

Published On :

திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்று வரும் குறும்பாலப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலியில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழையால் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம், சாலைகள் அனைத்தும் மழைநீா் சூழ்ந்து பெரும் சேதம் ஏற்பட்டது. சந்திப்பு பகுதியில் இருந்து தாமிரவருணிக்கு மழைநீா் வழிந்தோட போதிய வசதியில்லாததால் தண்ணீா் தேங்கியதாக மக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி சந்திப்பில் இருந்து சிந்துபூந்துறை வழியாக தாமிரவருணிக்கு மழைநீா் வடிகால் ஓடையை பெரிதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, த.மு.சாலையில் தொடங்கி மதுரை சாலை வழியாக சிந்துபூந்துறைக்கு ஓடை அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் மதுரை சாலையில் குறும்பாலப் பணி, பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி, குடிநீா் குழாய் பதிக்கும் பணி உள்ளிட்டவை ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இப்பணி நீடித்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா். குறிப்பாக பெண் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. ஆகவே, இந்தப் பாலப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.